நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு: ஆளுநர் மாளிகை விளக்கம்

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் குறித்து ஆளுநர் மாளிகை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

News image

ஆளுநர் ஆர்.என். ரவி (கோப்புப் படம்)

Updated On :6 ஜூலை 2023, 1:16 pm

DIN

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் குறித்து ஆளுநர் மாளிகை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

முறைகேடு வழக்குகள் தொடா்பாக அதிமுக முன்னாள் அமைச்சா்களான சி.விஜயபாஸ்கா், பி.வி.ரமணா, கே.சி.வீரமணி, எம்.ஆா்.விஜயபாஸ்கா் ஆகியோர் மீது நீதிமன்ற நடவடிக்கையைத் தொடங்க அனுமதி வழங்கக்கோரி ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி நேற்று (புதன்கிழமை) கடிதம் எழுதியிருந்தார். 

இந்நிலையில், இதற்கு பதில் அளித்து ஆளுநர் மாளிகை சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கா் ஆகியோர் மீதான வழக்குகள் சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வருகிறது மற்றும் சட்டப்பூர்வ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்றும்,

கே.சி.வீரமணி மீதான ஊழல் வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணை அறிக்கையை தமிழ்நாடு அரசு இன்னும் தரவில்லை என்பதால் அறிக்கை கிடைக்கும் வரை நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், 

எம்.ஆர். விஜயபாஸ்கர்  தொடர்பாக மாநில அரசிடம் இருந்து எந்த கோரிக்கையும் குறிப்பும் கிடைக்கப்பெறவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Story image

ஆனால், ஆளுநர் மாளிகை சார்பில் அளிக்கப்பட்ட இந்த விளக்கம் ஏற்கத்தக்கதல்ல என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.