
கோப்புப்படம்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பான விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பு அளித்த ஆவணங்களையடுத்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ள தேர்தல் ஆணையம்.
அதிமுக பொதுச் செயலாளராக கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், தற்போது அதன் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்திடம் இபிஎஸ் தரப்பு அது தொடர்பான ஆவணங்களையும் அளித்திருந்தது. இந்த ஆவணங்களை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், அதிமுக பொதுச் செயலாளர் என்று தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரித்துள்ளது தேர்தல் ஆணையம். அதுபோல, எடப்பாடி பழனிசாமி நியமித்த கட்சி நிர்வாகிகளையும் அங்கீகரித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...