மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஆடிப்பூர திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம்!

நெல்லை நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆடிப்பூர திருவிழாவின் 4ம் திருநாளில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

News image
Updated On :15 ஜூலை 2023, 10:32 am

DIN

நெல்லை நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆடிப்பூர திருவிழாவின் 4-ம் திருநாளில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் நான்காம் திருநாளான இன்று காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவையொட்டி காந்திமதி அம்பாள் மரக் கேடயத்தில் வெண்பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். 

Story image

தொடர்ந்து மேளதாளம் முழங்க காந்திமதி அம்பாள் சுவாமி சன்னதிக்கு  சென்று அங்கு சுவாமியிடம் பட்டு வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைதொடர்ந்து ஊஞ்சல் மண்டபத்திற்கு மேலவாத்தியங்கள் இசைக்க எழுந்தருளிய காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு நலுங்கும், வளையல் அணிவிக்கும் உற்சவமும் நடைபெற்றது. 

அதன்பின், அம்பாளுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.