
காமராஜர் படத்துக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர்.
வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் காமராஜர் உருவப் படத்துக்கு மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மரியாதை செலுத்தினார்.
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசு கடைப்பிடித்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சியினரும் காமராஜர் ஆட்சியை அமைப்போம் எனக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளக்கோவில் பகுதி திமுக சார்பில் கரூர் சாலையிலுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் காமராஜர் பிறந்த நாளைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | காமராஜர் பிறந்தநாள்: அரசுப்பள்ளி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
இந்நிகழ்ச்சியில் மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று காமராஜர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் கே.ஆர். முத்துக்குமார், வெள்ளக்கோவில் ஒன்றியச் செயலாளர் கே. சந்திரசேகரன், நகரச் செயலாளர் எஸ். முருகானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...