காமராஜர் பிறந்தநாளையொட்டி சென்னை நங்கநல்லூர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி சென்னை நங்கநல்லூர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். பள்ளியில் வைக்கப்பட்டிருந்த காமராஜரின் திருவுருவப்படத்திற்கு முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ் அகராதி புத்தகங்களை வழங்கியதுடன் தனக்கு பரிசாக வந்த 7,740 புத்தகங்களை நூலகங்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க | கறுப்பு ரோஜாவின் கடைசி தரிசனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.