என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. பாடல் மூலம் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன் (விடியோ)

வேலூர் மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று ஒரு கேள்விக்குப் பதிலாக பாட்டுப் பாடியுள்ளார்.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. பாடல் மூலம் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன் (விடியோ)

காட்பாடி: வேலூர் மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று ஒரு கேள்விக்குப் பதிலாக பாட்டுப் பாடியுள்ளார்.

செய்தியாளர்களின் கேள்வி என்ன? அதற்காக அமைச்சர் ஏன் பாடலைப் பாடினார் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தை விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நேரில் ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு, தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அமைச்சர் வீடுகளில் அடுத்தடுத்து சோதனை  நடைபெறுகிறதே என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, சோதனை நடத்துபவர்களைத்தான் கேட்கணும். முயற்சி செய்கிறேன், அவர்களை கேட்கணும், பார்க்கலாம் என்னதான் நடக்குதோ நடக்கட்டும் என்று அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.

அடுத்து, இது பழிவாங்கும் நடவடிக்கை என நினைக்கிறீர்களா என மற்றொரு செய்தியாளர் கேட்டதற்கு, என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..
இருட்டினில் நீதி மறையட்டுமே.. எனப் பாடல் பாடி அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com