
ஈரோடு: கீழ்பவானி பாசன கால்வாயில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தண்ணீர் திறக்க கோரியும், கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணை எண் 276ஐ ரத்து செய்யக் கோரியும் ஈரோடு அருகே பாசன விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்பவானி கால்வாயில் ரூ.720 கோடி மதிப்பில் கான்கிரீட் திட்டம் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பிறகு, பணிகள் தொடங்கப்பட்ட இடத்தில் மட்டும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளப்படும் என்றும், ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என கூறப்பட்டது.
ஆனாலும் பணிகள் தொடங்கப்பட்ட 11 நாள்களுக்கும் மேலாக பொதுப்பணித்துறை மற்றும் கட்டுமான நிறுவனம், கால்வாயின் கரைகளை சேதப்படுத்தி பணிகளை செய்து வருகின்றனர்.
இதையும் படிக்க: 15 வினாடிகளில் விற்றுத்தீர்ந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழா டிக்கெட்கள்!
இந்நிலையில் பணிகளை விரைந்து முடித்து அமைச்சர் முத்துசாமி மற்றும் அதிகாரிகள் கூறியபடி ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட வேண்டும். மேலும் கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணை எண் 276 ஐ ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கீழ்பவானி பாசன கால்வாய் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...