வருமானம் உயரும் இந்த ராசிக்கு: வாரப்பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜூலை 28 - ஆகஸ்ட் 3) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.
வருமானம் உயரும் இந்த ராசிக்கு: வாரப்பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜூலை 28 - ஆகஸ்ட் 3) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

குடும்பத்தினரிடம் பாசத்தோடு பழகுவீர்கள்.  சொத்து  வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவீர்கள். தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிகளை அமைதியாக இருந்து கடந்துவிடுவார்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் ஏற்றத் தாழ்வுகளைக் காண்பார்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவார்கள். 

அரசியல்வாதிகள் உஷாராக இருக்கவும். கலைத் துறையினர்  கவனமாக இருக்கவும். பெண்கள் தைரியத்தை இழக்க வேண்டாம். 

மாணவர்களுக்கு பழைய முயற்சிகள் கை கொடுக்கும்.

சந்திராஷ்டமம் - ஜூலை 28,29.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

வருமானம் உயரும். ஸ்பெகுலேஷன் துறைகளிலிருந்து லாபம் கொட்டும். குடும்பத்தில் சுமுகமான பாகப் பிரிவினை உண்டாகும்.  உயர்ந்தோரின் ஆதரவில் உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களை அனுசரித்து நடக்கவும். வியாபாரிகளுக்கு பணப் புழக்கம் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு மகசூல் கூடுதலாகும். 

அரசியல்வாதிகள் சரியான முறையில் எண்ணங்களை வெளிப்படுத்துவார்கள்.  கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். பெண்களுக்கு மன அமைதி ஏற்படும். 

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.

சந்திராஷ்டமம் - ஜூலை 30,31.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உடனிருப்போருடன் உறவைப் பேணிக் காப்பீர்கள். சிக்கலான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் மேற்படிப்புக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் உதவுவார்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வெற்றி பெறுவார்கள். விவசாயிகள் புதிய வசதிகளை மேம்படுத்துவார்கள். 

அரசியல்வாதிகள் எச்சரிக்கையாகப் பேசவும். கலைத் துறையினர் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். பெண்கள் பிறருக்கு உதவுவார்கள். மாணவர்கள் பெற்றோரின் ஆலோசனையை கேட்பார்கள்.

சந்திராஷ்டமம் - ஆக. 01,02.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உங்கள் அறிவும் புத்திசாலித்தனமும் கூடும். அரசு  சலுகை கிடைக்கும். நேர்வழியில் யோசிப்பீர்கள். எதிரிகளின் தொல்லைகள் மறையும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் சீராக இருக்கும். வியாபாரிகள் பிறரின் பிரச்னைகளை அலசுவார்கள். விவசாயிகள் பாசன வசதிகளுக்குச் செலவு செய்வார்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களிடம் கண்ணியத்துடன் பழகுவார்கள். கலைத் துறையினர் புதிய தொழில்நுட்பங்களைக் கற்பார்கள். பெண்களுக்கு உடனிருப்போருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். 

மாணவர்கள் நல்ல நண்பர்களிடம் பழகவும்.

சந்திராஷ்டமம் - ஆக. 03

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

தொழிலில் நிரந்தரத் தன்மையைக் காண்பீர்கள். உங்களுக்கு கீழ் பணிபுரிவோரை அரவணைத்துச் செல்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தைகளை வெளிநாடு அனுப்பி படிக்க வைப்பீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளின் ஆதரவு பெருகும். விவசாயிகள் அரசு மானியங்களைப் பெறுவார்கள். 

அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் கிடைக்கும். கலைத் துறையினருக்கு உதவிகள் கிடைக்கும். பெண்கள் கணவர் வழி உறவினர்களிடம் ஒற்றுமையாகப் பழகுவார்கள். மாணவர்கள் நல்ல யோகம் உண்டாகும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

மற்றவர்களின் பேச்சை அலட்சியப்படுத்தாமல் மதிப்பு கொடுத்து நடப்பீர்கள். புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள்.  சுபச் செய்திகள் வந்து சேரும். 

உத்தியோகஸ்தர்கள் தங்களது குறைகளை மேலதிகாரிகளிடம் தெரியப்படுத்துவார்கள். வியாபாரிகள் லாபத்தைக் காண்பார்கள். விவசாயிகள் பிறருக்கு உதவிகளைச் செய்வார்கள்.  

அரசியல்வாதிகளுக்கு உரிய மரியாதை கிடைக்கும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பெண்கள் புதிய அணிகலன்களை வாங்குவார்கள். 

மாணவர்கள் பிடிவாத குணத்தை விட்டொழிக்கவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

நீண்ட நாள் கனவு நிறைவேறும். தொழிலில் சரியான முடிவை எடுப்பீர்கள். அறிவுபூர்வமாகப் பேசுவீர்கள். உயர்ந்தோரின் உதவியும் ஆலோசனையும் கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்கள் பிறரிடம்  இயல்பாகப் பழகுவீர்கள். வியாபாரிகளின் முயற்சிகள் கைகூடும். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். 

அரசியல்வாதிகளிடம் மேலிடம் கருணையுடன் நடந்து கொள்ளும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.  பெண்களுக்கு நன்மதிப்பு 
உண்டாகும். மாணவர்கள் பெற்றோரின் வழிகாட்டுதல்படி நடப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள். உடல், மன வளத்தை மேம்படுத்துவீர்கள். உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். வியாபாரிகள் கடினமாக உழைப்பார்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவார்கள்.

அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும்.  கலைத் துறையினருக்கு திருப்தியான வருவாய் கிடைக்கும். பெண்கள் குழந்தைகளின் எதிர்காலத்தில் கவனம் செலுத்துவார்கள். 

மாணவர்கள் தீயவர்களிடமிருந்து விலகுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

திட்டமிட்டு உழைப்பீர்கள். பணவரவு உண்டு. புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். குழந்தைகளால் மனநிம்மதி ஏற்படும். 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணியால் நன்மை உண்டாகும். வியாபாரிகள் வியாபாரத்தை நன்முறையில் நடத்துவார்கள். விவசாயிகள் அமோக விளைச்சலைக் காண்பார்கள். 

அரசியல்வாதிகள் பிரச்னைகளைச் சமாளிக்க வேண்டிவரும். கலைத் துறையினருக்கு புதிய நட்புகள் உண்டாகும். பெண்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்வார்கள். 

மாணவர்கள் உடற்பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
சரியாகச் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். வருவாய் வரத் தொடங்கும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.  உடன்பிறந்தோரிடம் பிணக்குகள் நீங்கும். 

உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்புடன் பணியாற்றுவார்கள். வியாபாரிகளுக்கு அரசு ஆதரவு கிடைக்கும். விவசாயிகள் பயிர்களால் கூடுதல் பலன் பெறுவார்கள். 

அரசியல்வாதிகள் பாகுபாடின்றி பழகுவார்கள். கலைத் துறையினர் முயற்சிகளில் வெற்றி பெறுவார்கள். பெண்களுக்கு சொத்துப் பிரச்னைகள் நீங்கும்.  மாணவர்கள் அநாவசியப் பேச்சுகளைப் பேச வேண்டாம்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

மனதில் இருந்த இனம் புரியாத குழப்பங்கள் நீங்கும். தொழிலில் இருந்த தேக்கநிலை மறையும். வருமானம் உயரும். கடன்களை அடைப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நிம்மதி கிடைக்கும். வியாபாரிகள் போட்டிகளைத் திறம்பட சமாளிப்பார்கள். விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். 

அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். கலைத்துறையினருக்கு புகழும், வருவாயும் அதிகரிக்கும். பெண்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். மாணவர்கள் உற்சாகத்துடன் பாடங்களைப் படிப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உடல் ஆரோக்கியம்  சீராகும். முக்கியஸ்தர்களின் உதவி கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.  சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.  

உத்தியோகஸ்தர்களின் நலனில் மேலதிகாரிகள் அக்கறை காட்டுவார்கள். வியாபாரிகள் கடன் கொடுக்க வேண்டாம். நீர்ப்பாசன வசதிகளில் விவசாயிகள் கவனம் செலுத்துவார்கள். 

அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் தொல்லை இருக்காது.  கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும்.  பெண்கள் வசீகரப் பேச்சால் அனுகூலங்களைப் பெறுவார்கள்.

மாணவர்கள் எதிர்கால நலன் குறித்து சிந்திப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com