ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு! மதுரை நகைக்கடை திருட்டு! இருவர் கைது! திருடனை அடையாளம் கண்டது எப்படி?விலைவாசி உயர்வில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த தமிழகம்: டிடிவி தினகரன் விமர்சனம் மதுரை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் மரணம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் அதிரடியாக விளையாடிய மோஹித் உல்வா இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

Mohit Ulva

மோஹித் உல்வா - படம் | பிசிசிஐ

Updated On :

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் அதிரடியாக விளையாடிய மோஹித் உல்வா இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்று வந்தது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று (நவம்பர் 14) மோதின. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் எடுக்க, இந்திய அணிக்கு 338 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 252 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆட்டம் பாகிஸ்தானுக்கு சாதகமாக மாறிய நிலையில், இறுதிக்கட்டத்தில் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பினார் மோஹித் உல்வா. அதிரடியாக விளையாடிய அவர் 26 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

ஆட்டத்தின் இறுதி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 8 ரன்களும், பாகிஸ்தானின் வெற்றிக்கு ஒரு விக்கெட்டும் தேவைப்பட்டது. ஆட்டத்தின் கடைசி பந்தில் இந்திய அணியின் வெற்றிக்கு மூன்று ரன்கள் தேவைப்பட ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடைசி பந்தில் பவுண்டரி அடித்து இந்திய அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தார் மோஹித் உல்வா. இதன் மூலம், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய மோஹித் உல்வாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. நம்பமுடியாத வகையில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மோஹித் உல்வாவுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Summary

Mohit Ulva played an explosive innings in the Under-19 Asia Cup final, helping the Indian team clinch the championship title.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.