ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

படம் | பிசிசிஐ
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்று வந்தது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று (நவம்பர் 14) மோதின. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் எடுக்க, இந்திய அணிக்கு 338 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
மோஹித் உல்வா அசத்தல்; சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!
338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் லக்ஷயா ராஜேஷ் ராய்சந்தனி மற்றும் ஆர்யவீர் சேவாக் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தது. ஆர்யவீர் சேவாக் 61 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். அதன் பின், விகே வினீத் 24 ரன்கள், அர்ஜூன் ராஜ்புட் 16 ரன்கள், யஷ்பர்தன் சௌகான் 9 ரன்கள், அன்வே டிராவிட் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய கேப்டன் லக்ஷயா ராஜேஷ் ராய்சந்தனி 101 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். இந்திய அணி 252 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆட்டம் பாகிஸ்தானுக்கு சாதகமாக மாறிய நிலையில், இறுதிக்கட்டத்தில் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பினார் மோஹித் உல்வா. அதிரடியாக விளையாடிய அவர் 26 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
ð.ð.ð.ð .ð£.ð.ð¢.ð¡.ð¦ ð
— BCCI (@BCCI) November 14, 2026
An absolutely incredible run chase in the Final gives India U19 the #MensU19AsiaCup 2026 title ð®ð³ ð
Scorecard â¶ï¸ https://t.co/srKsrr1jna pic.twitter.com/BYh3iNO18o
ஆட்டத்தின் இறுதி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 8 ரன்களும், பாகிஸ்தானின் வெற்றிக்கு ஒரு விக்கெட்டும் தேவைப்பட்டது. ஆட்டத்தின் கடைசி பந்தில் இந்திய அணியின் வெற்றிக்கு மூன்று ரன்கள் தேவைப்பட ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடைசி பந்தில் பவுண்டரி அடித்து இந்திய அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தார் மோஹித் உல்வா. இதன் மூலம், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
Summary
In the final of the Under-19 Asia Cup cricket tournament, the Indian team defeated Pakistan by one wicket to clinch the championship title.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


