யு19 ஆசிய கோப்பை! சதம் விளாசிய சேவாக் மகன் ஆர்யவீர்!
யு19 ஆசிய கோப்பை போட்டியில் சேவாக் மகன் ஆர்யவீர் சதம் விளாசியது பற்றி...

ஆர்யவீர் சேவாக் - Photo: X | BCCI
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் ஆர்யவீர் சேவாக் சதம் விளாசியுள்ளார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் நாட்டில் நடைபெற்று வருகின்றது. ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றியும், ஒரு தோல்வியும் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது குரூப் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, நேபாளம் அணிக்கு எதிராக மூன்றாவது போட்டியில் இன்று விளையாடி வருகின்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி, இந்தியாவுக்கு எதிராக பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
45 ஓவர்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்களுடன் விளையாடி வருகின்றது.
இந்த போட்டியில் களமிறங்கிய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக் 160 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 17 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.
மேலும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியில், முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட்டின் மகன் அன்வே டிராவிட்டும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
U19 Asia Cup! Sehwag’s son Aryavir smashes a century!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


