சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

நெல்லை கங்கைகொண்டானில் மரத்தில் பைக் மோதியதில் இளைஞர் பலி

திருநெல்வேலியை அடுத்த கங்கைகொண்டானில் வெள்ளிக்கிழமை அதிகாலை மரத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

News image
ஆலமரத்தில் மோதிய பைக்
Updated On :2 பிப்ரவரி 2024, 2:44 am

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலியை அடுத்த கங்கைகொண்டானில் வெள்ளிக்கிழமை அதிகாலை மரத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள சண்முகாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் அரவிந்த் (21). இவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியார் பிஸ்கட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். 

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை கம்பெனிக்கு வேலைக்கு செல்வதற்காக அரவிந்த் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அங்குள்ள தனியார் மாவு மில் அருகே வந்துகொண்டிருந்த போது பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள ஆலமரத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் கங்கைகொண்டான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் அரவிந்த் உடலை மீட்டு உடல் கூறாய்வுக்காக பாளை. அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.