
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி (கோப்புப் படம்)
புதுச்சேரி அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய ரங்கசாமி, மக்கள் மீது வரிச்சுமையை திணிக்காமல் திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் புதுச்சேரி மாநிலம் நாட்டிலேயே முதன்மை இடம் வகிக்கிறது எனக் குறிப்பிட்டார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...