சென்னை: சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாள் நாளை(ஜூன் 3) கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படவுள்ள இந்த நிகழ்வுக்கான இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இலச்சினை வெளியீட்டு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,
1997ஆம் ஆண்டு டைடல் பூங்காவை ஏற்படுத்தி தொழில்நுட்பத்துறையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி புரட்சியை ஏற்படுத்தினார். சென்னையில் உலக தரத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் ‘கலைஞர் கன்வென்ஷன் சென்டர்’ அமைக்கப்படும்.
பல நாடுகளில் இருப்பது போன்று சென்னையில் அமையவுள்ள இந்த உலகத் தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கமானது கருணாநிதியின் பெயரை நூற்றாண்டு கடந்து எடுத்துச் செல்லும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் கணக்கு பராமரிப்புப் பதிவேடுகள் ஆய்வு

சங்கராபுரம் வள்ளலாா் மன்ற முப்பெரும் விழா

தபால் வாக்குகள்: வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய மழைநீா்: 5 ஆயிரம் மூட்டைகள் சேதம்
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

