நெய்வேலி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி: உறவினர்கள் சாலை மறியல்

நெய்வேலி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி ஒருவர் பலியான சம்பவத்தில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நெய்வேலி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி ஒருவர் பலியான சம்பவத்தில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு நிவாரணம் மற்றும் பணி வழங்கக் கோரி கடலூர் - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் உறவினர்கள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம் வட்டம், ஊத்தங்கால் கிராமத்தில் வசித்து வந்தவர் ராமலிங்கம் மகன் நாராயணசாமி (45), எலக்ட்ரீசியன். இவர் மின்சார வாரிய ஊழியர்களுக்கு  உதவியாக அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் ஏறி பராமரிப்பு பணிகள் செய்து வருவாராம்.

விருத்தாச்சலம் அடுத்துள்ள கொம்பாடிகுப்பம் கிராமத்தில் திங்கள்கிழமை இரவு காற்றுடன் மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. மின்சார தடையை சீர் செய்வதற்காக கொம்பாடிகுப்பத்தில் உள்ள ஒரு மின்கம்பத்தில் நள்ளிரவு 12 மணி அளவில் மின் கம்பத்தில் ஏறி பராமரிப்புப் பணி செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

அங்கிருந்தவர்கள் நாராயணசாமியின் உடலை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

இந்நிலையில் நாராயணசாமியின் உறவினர்கள் உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கடலூர் விருத்தாச்சலம் நெடுஞ்சாலையில் மின்சார வாரியம் அலுவலகம் அருகே சாலை மறியலில்  ஈடுபட்டனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்சார வாரிய செயற்பொறியாளர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ரூ.5 லட்சம் நிவாரணமாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை வாங்குவதாக உறுதி அளித்தாராம். 

இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலந்து சென்றனர். இதனால் கடலூர் விருத்தாச்சலம் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com