ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 7:07 pm

DIN

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருக்கும் வி.செந்தில் பாலாஜியின் வீடு, தலைமைச் செயலக அறை உள்பட 11 இடங்களில் அமலாக்கத் துறையினா் நேற்று சோதனையில் ஈடுபட்டனா். 

இதையடுத்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டிலிருந்து செந்தில் பாலாஜியை இன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா்.

சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு செல்லும் வழியில், நெஞ்சுவலி ஏற்பட்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சா் செந்தில் பாலாஜி கூறிய நிலையில் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

இதன் தொடர்ச்சியாக சென்னை தலைமை செயலகத்தில் முக்கிய அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.