திடீர் மழை ஏன்?: தனியார் வானிலை ஆய்வாளர் விளக்கம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவே மழை பெய்து வருகிறது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் விளக்களித்துள்ளார்.
திடீர் மழை ஏன்?: தனியார் வானிலை ஆய்வாளர் விளக்கம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவே மழை பெய்து வருகிறது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் விளக்களித்துள்ளார்.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(ஜூன்19) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். சென்னையில் பெய்துவரும் கனமழையால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. 

இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் மழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சென்னை கிண்டியில் உள்ள கத்திரபாரா பாலத்தின் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. சுரங்கப்பாதையில் அதிகளவில் நீர் தேங்கியுள்ளதால் கார், இருசக்கர வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் நேற்று ஒரேநாளில் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 14செ.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாகவே மழை பெய்து வருகிறது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் விளக்களித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தமிழகம் அருகே உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவே மழை தொடர்கிறது. 

தென்சென்னை பகுதிகளில் ஒரே இரவில் இயல்பை விட 3 மடங்கு அளவில் மழை கொட்டித்தீர்த்து உள்ளது. மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு சென்னையில் மழை தொடரும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு, ஜூன் மாதத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com