வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கலைஞர் கோட்ட திறப்பு விழா: நிதீஷ் குமார் வருகை ரத்து

திருவாரூரில் கலைஞர் கோட்ட திறப்பு விழாவையொட்டி தமிழ்நாடு வரவிருந்த பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :20 ஜூன் 2023, 6:42 am

DIN

திருவாரூரில் கலைஞர் கோட்ட திறப்பு விழாவையொட்டி தமிழ்நாடு வரவிருந்த பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

உடல்நலக்குறைவு காரணமாக அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்குப் பதிலாக துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கலந்துகொள்வார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் திறந்துவைப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

திருவாரூரை அடுத்த காட்டூரில் 7 ஆயிரம் சதுர அடியில் ரூ.12 கோடி மதிப்பில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டத்தில் இரண்டு திருமண மண்டபங்கள், முத்துவேலர் நூலகம் மற்றும் கலைஞரின் முழு உருவ சிலை போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மிக பிரம்மாண்டமாக திருவாரூர் தேர் போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகிறது. 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிகார் முதல்வர் நிதீஷ்குமார், கலைஞர் கோட்டத்தை திறந்துவைக்க திட்டமிடப்பட்டிருந்தது. முத்துவேலர் நூலகத்தை பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி திறந்துவைப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது. 

தற்போது நிதீஷ் குமார் வருகை ரத்தானதால் கோட்டத்தை யார் திறந்துவைப்பார்கள் என திமுக விரைவில் தகவல் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.