சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 273-வது கூட்டம்!

சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 273-ஆவது குழுமக் கூட்டம் சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமத் தலைவரும் அமைச்சருமான சேகர்பாபு தலைமையில் இன்று நடைபெற்றது. 
சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 273-வது கூட்டம்!
Published on
Updated on
1 min read

சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 273-ஆவது குழுமக் கூட்டம் சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும தலைவரும் அமைச்சருமான சேகர்பாபு தலைமையில் இன்று நடைபெற்றது. 

இக்குழுமக் கூட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பொதுமக்களின் போக்குவரத்து இணைப்பினை மேம்படுத்த, தாம்பரம்-செங்கல்பட்டு புறநகர் ரயில்பாதையில் புதிய புறநகர் ரயில் நிறுத்தம் மற்றும் ரயில் நிறுத்தத்திலிருந்து பேருந்து முனையத்தை இணைப்பதற்கு நகரும் மேல்மட்ட நடைமேடை அமைப்பது

மாதவரம் பேருந்து மற்றும் சரக்குந்து வளாகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சிக்கு நிதியளிப்பது

சென்னை பெருநகர எல்லைக்குள் நிலஉபயோக மாற்ற விண்ணப்பங்கள் ஆகியவற்றின் மீது முடிவுகள் எடுக்கப்பட்டன.

2023-2024ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்தும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இக்குழுமக் கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ். முருகன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா இ.ஆ.ப., சட்டப்பேரவை உறுப்பினர்கள் (மாதவரம்) எஸ்.சுதர்சனம் , (திரு.வி.க.நகர்) பி.சிவக்குமார் என்கிற தாயகம் கவி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் செயலாளர் பிரசாந்த் மு,வடநெரே, இ.ஆ.ப.,, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர்  ம. கோவிந்தராவ், இ.ஆ.ப.,, நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குநர் பா. கணேசன், இ.ஆ.ப., குழும உறுப்பினர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com