
கோப்புப்படம்
வங்கக்கடலில் அதி தீவிர புயலாக மோக்கா உருவெடுத்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 கி.மீ. வேகத்தில் நகரும் மோக்கா புயல் 14 ஆம் தேதி வங்கதேசம் - மியான்மர் இடையே அதி தீவிர புயலாகவே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோக்கா புயல் கரையை கடக்கும்போது 175 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: 2024 மக்களவைத் தோ்தலில் பிஜேடி தனித்துப் போட்டி: நவீன் பட்நாயக்
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெள்ளி முதல் திங்கள்கிழமை (மே 15) வரை 4 நாள்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.