

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 20 ஆம் தேதி திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வரும் 20 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும்.
இந்த கூட்டத்தில் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு துரைமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.