
கோப்புப் படம்
கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், 3,762 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் காவல் துறை தமிழ்நாடு முழுவதும் சோதனை நடத்தி வருகிறது.
கடந்த 13ஆம் தேதி முதல் நடத்தப்பட்ட இந்த சோதனையில், இரண்டு நாள்களில் மட்டும் 1,558 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கள்ளச்சாராய சோதனையில் தற்போதுவரை தமிழ்நாடு முழுவதும் 3,762 கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 94,560 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.