
கோப்புப்படம்
தமிழகத்தில் டி.எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் தாராபுரம் டிஎஸ்பி தனராசு நாமக்கல் மாவட்ட துணை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி டிஎஸ்பி சரவணனை பழனி டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்ட மனித உரிமைகள் மற்றும் சமூகநீதி டிஎஸ்பி பிரபு ராணிப்பேட்டை டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தருமபுரி பென்னாகரம் டிஎஸ்பி இமயவர்மன் திருச்செங்கோடு டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் திறக்கக் கூடாது: ராகுல் காந்தி
திருச்செங்கோடு டிஎஸ்பி மகாலட்சுமி தருமபுரி பென்னாகரம் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். பரமத்திவேலூர் டிஎஸ்பி கலையரசன் மாற்றப்பட்டு புதிய டிஎஸ்பியாக ராஜாமுரளி நியமிக்கப்பட்டுள்ளார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...