பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கிணற்றில் விழுந்த பசுமாட்டை மீட்க இறங்கிய விவசாயி பலி

விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை மீட்க இறங்கிய விவசாயியின் தலையில் கல் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published On :

விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை மீட்க இறங்கிய விவசாயியின் தலையில் கல் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்பகனூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் வசித்து வருபவர் விவசாயி தங்கவேல் மகன் மணி (42). இவருக்கு திருமணம் ஆகி சித்ரா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ள நிலையில், அவரது உறவினரின் பசுமாடு ஒன்று  50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்து உள்ளது.

மணி.

மணி.

இதனையடுத்து அவரது உறவினரான தங்கதுரை, கண்ணன், முத்துராஜா, விவசாயி மணி ஆகிய நான்கு பேரும் கிணற்றில் இறங்கி பசுமாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கிணற்றின் மேல் பகுதியில் இருந்த கட்டுக்கல் சரிந்து மணியின் தலை மீது விழுந்ததில், பலத்த காயம்மடைந்த  மணி ரத்த வெள்ளத்தில் சரிந்து நீரில்  மூழ்கிய நிலையிலேயே உயிரிழந்தார். 

இதனையடுத்து ஆத்தூர் தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்த  பசுமாட்டை உயிருடன் மீட்டனர். பின்னர் விவசாயி மணியின்  உடலை சுமார் 5 மணி நேர  போராட்டத்திற்கு பின்னர்  உடலை மீட்டனர். 

இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆத்தூர் ஊரக காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: மேட்டூர் அணை நிலவரம்!

உறவினரின் பசுமாட்டை மீட்க கிணற்றில் இறங்கிய விவசாயின் தலை மீது கல் விழுந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.