தினமணி சார்பில் காவலர்களுக்கு குடிநீர், தூய்மைப் பணியாளர்களுக்கு தொப்பி, கையுறைகள்!

தினமணி நாளிதழ் சார்பில் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு தொப்பி, கையுறைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
தினமணி சார்பில் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்துகாவலர்களுக்கு குடிநீர் பாட்டில், பழரசங்களை வழங்குகிறார் மாநகராட்சி மேயர் என்.தினேஷ்குமார்.
தினமணி சார்பில் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்துகாவலர்களுக்கு குடிநீர் பாட்டில், பழரசங்களை வழங்குகிறார் மாநகராட்சி மேயர் என்.தினேஷ்குமார்.
Updated on
1 min read

திருப்பூர்: கோடை வெப்பத்தை சமாளிக்கும் வகையில் தினமணி நாளிதழ் சார்பில் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு தொப்பி, கையுறைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

தினமணி நாளிதழ் சார்பில் தாகம் தணிப்போம் என்ற கருப்பொருளில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருப்பூர் வடக்கு சரக போக்குவரத்து காவல் உதவி ஆணையர் செ.ப.சுப்பராமன் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற மாநகராட்சி மேயர் என்.தினேஷ்குமார், பெருந்தொழுவு டிகேடி குளோபல் பப்ளிக் பள்ளி(சிபிஎஸ்இ) செயலாளர் எம்.ஷகீலாபர்வீன், பள்ளியின் அறக்கட்டளை உறுப்பினர் ஜெ.முஸ்தக்அகமது ஆகியோர் போக்குவரத்து காவலர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், பழரசங்களை வழங்கித் தொடக்கிவைத்தனர்.

தூய்மைப் பணியாளர்களுக்கு தொப்பி, கையுறைகள் வழங்கல்: இதைத்தொடர்ந்து, திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு தொப்பி, கையுறைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் 100 தூய்மைப் பணியாளர்களுக்கு 100 தொப்பி மற்றும் 160 கையுறைகள் மற்றும் குடிநீர் பாட்டில்களை இலவசமாக வழங்கினார். 

திருப்பூர் மாநகரில் முக்கிய சந்திப்புகளில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு செவ்வாய், புதன்கிழமைகளில் தலா 300 குடிநீர் பாட்டில்கள், 300 பழரசங்கள் வழங்கப்படவுள்ளன. இந்த நிகழ்ச்சியில்,டிகேடி குளோபல் பப்பளிக் பள்ளி முதல்வர் வி.பி.சரண்யா, மாநகராட்சி 3 ஆவது மண்டல சுகாதார ஆய்வாளர் கே.ராமகிருஷ்ணன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சரவணன், தினமணி கோவை பதிப்பு முதுநிலை மேலாளர் ஜி.தியாகராஜன், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியை தினமணி, டிகேடி குளோபல் பப்பளிக் பள்ளி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com