பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அல்-காதிா் அறக்கட்டளை ஊழல் வழக்கில், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானை இஸ்லாமாபாத் உயா்நீதிமன்ற வளாகத்தில் தேசிய ஊழல் தடுப்பு அமைப்பினா் கடந்த மே 9 ஆம் தேதி கைது செய்தனா். அவரை கைது செய்தது சட்டவிரோதம் எனக் கூறி, அவரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. அப்போது இம்ரான் கானுக்கு இரு வாரங்கள் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து ஜாமீன் காலம் முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணையில் இம்ரான் கானுக்கு ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிரான 8 வழக்குகளிலும் வருகிற ஜூன் 8 வரை ஜாமீன் பெற்றுள்ளார்.
இதையும் படிக்க | அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்!