
சீமான் (கோப்புப் படம்)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் டிவிட்டர் பக்கங்களும் ஒரே நேரத்தில் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளன.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், மேடைகளில் உணர்வுப்பூர்வமாகவும் ஆவேசமாகவும் பேசும் காணொலிகளைப் பகிர்வது வழக்கம்.
மேலும், அரசுக்கு எதிரான கருத்துகளையும் டிவிட்டரில் பதிவிடுவார். இந்நிலையில், சீமானின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
அவரின் டிவிட்டர் பக்கத்திற்குச் சென்றால், சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்தி, பாக்கியராஜன், விக்கி பார்கவ் உள்பட மேலும் சிலரின் டிவிட்டர் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...