
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் 14ஆவது நபரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.
போத்தனூர் பகுதியைச் சேர்ந்த தாஹா நசீர் என்பரை கைது செய்த என்ஐஏ அதிகாரிகள், சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இத்துடன் இவ்வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.
கோவை, உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவத்தில் காரில் இருந்த ஜமேஷா முபீன் (29) அதே இடத்தில் உயிரிழந்தார்.
முபீன் வீட்டில் போலீஸாா் நடத்திய சோதனையின்போது, ஏராளமான வெடிபொருள்கள், ஐஎஸ் அமைப்புடன் தொடா்புடையதாக பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து இவ்வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.