கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆளுநர் எந்த முடிவையும் எடுக்கவில்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு ஆளுநர் தரப்பில் இருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். 

News image

கோப்புப்படம்

Updated On :25 நவம்பர் 2023, 7:49 am


சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு ஆளுநர் தரப்பில் இருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். 

சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு ஆளுநர் தரப்பில் இருந்த எந்தவிதமான பதிலும் வரவில்லை. 

இரண்டாவது முறையாக பத்து மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

பஞ்சாப் ஆளுநர் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு சாதகமாக உள்ளது. அதை வழக்குரைஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைப்பார்கள். 

ஆளுநர் மசோதாக்களை காத்திருப்பில் வைத்திருக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எந்தவித மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டாலும், மீண்டும் நிறைவேற்றி அனுப்புவோம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.