கோவை நகைக்கடை கொள்ளை: கொள்ளையடித்த நபரின் புகைப்படம் வெளியீடு

கோவை காந்திபுரம் நகைக் கடையில் கொள்ளையடித்த நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டிருப்பதுடன் 2.7 கிலோ தங்க நகைகள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 
விஜய்
விஜய்
Updated on
1 min read


கோவை காந்திபுரம் நகைக் கடையில் கொள்ளையடித்த நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டிருப்பதுடன் 2.7 கிலோ தங்க நகைகள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள பிரபல நகைக் கடையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கொள்ளை நடைபெற்றது. கடையின் ஏ.சி. வெண்டிலேட்டரை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா், நகைக் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமாா் 200 பவுன் நகைகள், வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளாா்.

இந்த கொள்ளை சம்பவம் தொடா்பாக ரத்தினபுரி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் கொள்ளை சம்பவம் பதிவாகியுள்ளது. குற்றவாளி தப்பிச் சென்றது மேலும் சில இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களிலும் பதிவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து குற்றவாளியை கைது செய்வதற்காக 5 தனிப்படைகளை அமைத்து மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். 

இந்த சம்பவம் குற்றவாளி அடையாளம் காணப்பட்டுவிட்டதாகவும், ஓரிரு நாள்களில் அவா் கைது செய்யப்படுவாா் எனவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்த நிலையில், நகைக் கடையில் கொள்ளையடித்த நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டிருப்பதுடன் 2.7 கிலோ தங்க நகைகள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

நகைக் கடையில் கொள்ளைில் கைவரிசை காட்டியவன் தருமபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த விஜய் (26) என்று அடையாளம் காணப்பட்டது. அவனை பிடிக்க ஆனைமலையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

ஆனைமலையில் விஜய் நண்பன் சுரேஷ் வீடு மற்றும் அரூரில் உள்ள விஜய் வீட்டில் இருந்து மொத்தம் 2.7 கிலோ தங்க நகைகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com