நேற்று போல் இன்றும் கனமழையை எதிர்பார்க்கலாம்: பாலச்சந்திரன்

தமிழகத்தில் நேற்று போல் இன்று மாலையும் கனமழையை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 
நேற்று போல் இன்றும் கனமழையை எதிர்பார்க்கலாம்: பாலச்சந்திரன்

தமிழகத்தில் நேற்று போல் இன்று மாலையும் கனமழையை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், 

நேற்று(29.12.23) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று(30.11.23) காலை 8.30 மணியளவில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். 

இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 03.12.23ல் புயலாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து 04.12.23 அதிகாலை வடதமிழகம்-தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகிளில் நிவலக்கூடும். 

அதோடு தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

இன்று முதல் ஐந்து நாள்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நேற்று கொட்டித்தீர்த்த கனமழையால், பல்வேறு சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், நேற்று போன்று இன்று மாலையும் கனமழைக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் புயல் டிசம்பர் 2-ல் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com