லியோ- அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு மனு

லியோ திரைப்படத்திற்கு காலை 4 மணி ரசிகர்கள் காட்சிக்காக அனுமதியளிக்கக் கோரி தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. 
லியோ- அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு மனு

லியோ திரைப்படத்திற்கு காலை 4 மணி ரசிகர்கள் காட்சிக்காக அனுமதியளிக்கக் கோரி தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. 

விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் லியோ. இந்த படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து உள்ளார். ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் வெளியான மாஸ்டர் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ பட சிறப்புக் காட்சிகள் தொடர்பாக புதிய அரசாணை ஒன்றை தமிழ்நாடு அரசு அண்மையில் வெளியிட்டது. அதில் லியோ பட சிறப்புக் காட்சி காலை 9 மணிமுதல்தான் தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இறுதிக் காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கு முடிக்கப்பட வேண்டும் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது. அதிகாலைமுதலே லியோ சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும் எனக் கூறப்பட்டுவந்த நிலையில், தமிழக அரசு இந்த புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் லியோ திரைப்படத்திற்கு காலை 4 மணி ரசிகர்கள் காட்சிக்காக அனுமதியளிக்கக் கோரி தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

மேலும் காலை 9 மணிக்கு பதில் காலை 7 மணிக்கே திரையிடவும் அனுமதிக்க வேண்டும் எனவும் அதில் கோரிக்கை வைத்துள்ளது. லியோ தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் முறையீடு தயாரிப்பு நிறுவனத்தின் முறையீட்டை ஏற்று மதியம் ஒரு மணிக்கு விசாரிப்பதாக நீதிபதி அனிதா சுமந்த் தெரிவித்துள்ளார். லியோ திரைப்படத்திற்கு ஒருநாளைக்கு 5 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி என அரசு உத்தரவிட்ட நிலையில் தயாரிப்பு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com