
கோப்புப்படம்
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் புதன்கிழமை எச்சரித்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று நேற்று காலை வடமேற்கு மற்றும் அதனையொட்டிய வங்கக்கடல் பகுதியில் மிக தீவிர புயலாக நிலவுகிறது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவிழந்து வங்கதேசத்தின் கெபுபரா மற்றும் சிட்டகாங் இடையே இன்று மாலை கரையைக் கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: சென்னை முதலிடம்
இந்த நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கோவை, தேனி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...