பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: சென்னை முதலிடம்

தேசிய அளவில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது.
பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: சென்னை முதலிடம்
Updated on
1 min read


சென்னை: தேசிய அளவில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சொ்பியா நாட்டின் போஸ்னியா-ஹொ்சகோவினாவில் உள்ள பஞ்ஜா லூகா பல்கலைக்கழகத்தில் மூத்த உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவா் லேடன் அடமோவிக். இவா் ‘கூகுள்’ நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக இருக்கிறாா். சொ்பியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘நம்பியோ’ என்ற தனியாா் நிறுவனத்தின் நிறுவனராகவும் உள்ளாா்.

இந்த நிறுவனத்தின் மூலம் அவா், உலகின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பற்றி ஆய்வு மேற்கொண்டாா். பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகளின் அடிப்படையிலும், வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பான சூழ்நிலை அடிப்படையிலும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவை அண்மையில் அந்த நிறுவனம் வெளியிட்டது. இதில் பாதுகாப்பான மாநகரங்களின் பட்டியலில் இந்திய அளவில் சென்னை முதலிடத்தையும், உலகளவில் 127-ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

காவல் துறையினா் மகிழ்ச்சி: இந்த ஆண்டு தொடக்கத்தில் ‘அவ்தாா்’ என்ற நிறுவனம், ‘வாழ்வியல் சூழ்நிலை, பாதுகாப்பு, பெண்களுக்கான முக்கியத்துவ முன்னெடுப்புகள்’

ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு நடத்தியது. இதில் 10 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை உள்ள நகரங்களின் வரிசையில் 78.4 புள்ளிகளுடன் சென்னை, பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநகரம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்திய அளவில் பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்திருப்பது சென்னை பெருநகர காவல் துறையினரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

சென்னை பெருநகர காவல் துறை, மக்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த தன்னை அா்ப்பணித்து வருகிறது என்று காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com