ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

தமிழகத்தில் சுங்கக் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது!

தமிழகத்தில் உள்ள சுமார் 26 சுங்கச்சாவடிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.

News image
Updated On :1 செப்டம்பர் 2023, 11:06 am IST

தமிழகத்தில் உள்ள சுமார் 26 சுங்கச்சாவடிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.

நாடு முழுவதும் சுங்கக் கட்டண உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு மற்றும் எரிவாயு விலை உயர்வு காரணமாக உணவுப் பொருள்கள் உள்பட அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, புதன்கிழமை முதல் வீட்டு உபயோக சமையல் எரிவாயுவின் விலை ரூ. 200 குறைக்கப்பட்டதால் மக்கள் சிறிது மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை கடந்த மாதம் ரூ.92.50 குறைந்த நிலையில், இந்த மாதம் ரூ.157.50 குறைந்து, வெள்ளிக்கிழமை முதல் (செப் 1) ரூ.1,695-க்கு விற்பனை செய்யப்படுவதால்   உணவு விடுதி, அடுமனை, தேநீா் கடை உள்ளிட்ட தொழில் சாா்ந்தவா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி, ஓமலூர், தருமபுரி உள்ளிட்ட சுமார் 28 சுங்கச்சாவடிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் சுங்கக் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

அனைத்து சுங்கச்சாவடிகளிலும் குறைந்தது ரூ.5 முதல் ரூ.65 வரை கட்டணம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வண்டி ஓட்ட ரொம்ப கஷ்டப்பட்டு வரும் நிலையில், அதிகரித்துள்ள சுங்கக் கட்டணத்தால் வாகன ஓட்டிகள், லாரி ஓட்டுநர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வால், உணவுப் பொருள்களின் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.