
கோப்புப்படம்
மேட்டூர்: கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் விடுவிக்கப்பட்ட தண்ணீர் சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நீர் வரத் தொடங்கியது காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5018 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 48.92 அடியிலிருந்து 48.48 அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 562 கன அடியிலிருந்து 5018 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | சின்னமனூரில் இளைஞர் குத்திக் கொலை: இருவர் சரண்
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 16.86 டி.எம்.சி.யாக உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...