வாழப்பாடி அருகே மழை வேண்டி உணவு யாசகம் எடுத்து வினோத வழிபாடு!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, மழை பொழிய வேண்டி, சிறுவர் சிறுமியர்களும், பெண்களும் வீடு வீடாக சென்று உணவு யாசகம் எடுத்து, அம்மனுக்கு படையல் வைத்து, கும்மியடித்து 3 நாள்கள் வினோத வழிபாடு நடத்தினர்.
மேலூரில் மழை வேண்டி கோயிலுக்கு முன் கூடி  கும்மியடித்து வினோத வழிபாடு நடத்திய பெண்கள்.
மேலூரில் மழை வேண்டி கோயிலுக்கு முன் கூடி  கும்மியடித்து வினோத வழிபாடு நடத்திய பெண்கள்.


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, மழை பொழிய வேண்டி, சிறுவர் சிறுமியர்களும், பெண்களும் வீடு வீடாக சென்று உணவு யாசகம் எடுத்து, அம்மனுக்கு படையல் வைத்து, கும்மியடித்து 3 நாள்கள் வினோத வழிபாடு நடத்தினர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், இன்றளவும் முன்னோர்கள் வழியில் மரபு மாறாமல், பல வினோத வழிபாட்டு முறைகளை கைவிடாமல் தொடர்ந்து வருகின்றனர். 

உணவு யாசகம் எடுத்து அம்மனுக்கு படைத்து கும்மியடித்து வேண்டுதல் வைத்த பெண்கள்! 

குறிப்பாக, வறட்சி நிலவும் தருணத்தில் காவல் தெய்வங்களுக்கு ஆடு, கோழி, பன்றி பலியிட்டு முப்பூஜை வழிபாடு நடத்துதல், அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், வயதில் மூத்த கைம்பெண்களுக்கு பாத பூஜை செய்து வழிபாடு நடத்துதல், கிராமத்தின் எல்லையில் எல்லைச்சாமிக்கு பன்றி பலி கொடுத்தல் போன்ற வினோத வழிபாடுகளை தொடர்ந்து வருகின்றனர்.

இந்த வரிசையில், வாழப்பாடி அடுத்த மேலூர் கிராமத்தில் மழை பொழிய வேண்டி, சிறுவர் சிறுமியர்களும், பெண்களும் வீடு வீடாக சென்று உணவு யாசகம் எடுத்து, கடந்த 3 நாள்களாக காவல் தெய்வமான மாரியம்மன் மற்றும் விநாயகருக்கும் படையல் வைத்து, கும்மியடித்து  வினோத வழிபாடு நடத்தினர்.

'முன்னோர்கள் வழியில், சிறுவர் சிறுமியரும், பெண்களும் நடத்திய இந்த வினோத வழிபாட்டால், தொடர்ந்து 3 நாள்களாக நல்ல மழை பெய்து வருகிறது என, பாமக ஒன்றிய குழு உறுப்பினர் உழவன். முருகன் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com