இந்து மதத்திற்கு எதிராகப் பேசவில்லை: அமைச்சர் உதயநிதி

சனாதனம் குறித்து பேசுகையில் இந்து மதத்திற்கு எதிராக பேசவில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். 
இந்து மதத்திற்கு எதிராகப் பேசவில்லை: அமைச்சர் உதயநிதி

தூத்துக்குடி: சனாதனம் குறித்து பேசுகையில் இந்து மதத்திற்கு எதிராக பேசவில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். 

தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சனாதனம் பேசும்போது பலருக்கு வயிற்றெரிச்சலாக உள்ளது. திராவிட ஆட்சி வந்த பின்னர்தான், பெண்களுக்கு படிப்பு கொடுத்து அவர்களை வெளியே கொண்டுவந்துள்ளது. தற்போதும் பெண்கள் உயர்கல்விக்கு புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. சனாதனம் குறித்து பேசும்போது, இந்து மதத்திற்கு எதிராகப் பேசவில்லை, பெண்களுக்கு எதிராக எந்த மதங்கள் செயல்படுகிறதோ அவற்றை குறித்தே பேசினேன் என்றார். 

முன்னதாக, சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'சனாதனத்தை எதிர்க்கக் கூடாது, ஒழிக்க வேண்டும். சனாதனம் சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரானது' என்று பேசினார். இதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com