
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை, செப்டம்பா் 15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.
இந்தத் திட்டத்துக்கான விண்ணப்பப் படிவங்கள் நியாய விலைக் கடை பணியாளா்கள் மூலமாக வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை இதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
அதன்படி, 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அவற்றில் 5 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | தமிழக அரசு மருத்துவமனைகளில் வெறும் 9% உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள்!
இந்நிலையில் திட்டம் செப். 15 அன்று தொடங்கவுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின், அதிகாரிகளுடன் இறுதிக்கட்ட ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெறும் இந்த கூட்டத்தில் திட்டப் பயனாளர்களின் இறுதிப் பட்டியல், செயல்படுத்தும் முறைகள் என இறுதிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாகத் தெரிகிறது.
தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, திட்டத்தின் இயக்குநர் இளம் பகவத் ஐஏஎஸ் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
இதையும் படிக்க | நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதவர்கள் டிக்கெட் நகலைப் பகிருங்கள்: ஏ.ஆர். ரஹ்மான்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...