
கோப்புப்படம்
தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று(செவ்வாய்க்கிழமை) முக்கிய ஆலோசனை நடைபெற்றது.
சென்னையில் டெங்கு காய்ச்சல் காரணமாக 4 வயது சிறுவன் உயிரிழந்ததையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முடுக்கி விட்டுள்ளது.
அதன்படி, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதையும் படிக்க | உண்மையிலேயே அது ஒரு சிறப்பு ரயில்தான்! வட கொரிய அதிபரின் ரயிலைப் பற்றி எக்ஸ்ளூசிவ்!
டெங்கு கொசு ஒழிப்புக்கு அடுத்தகட்ட நடவடிக்கைகள், டெங்கு பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, கால்நடைத்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...