முதல்வர் வருகை: வேலூரில் நாளை டிரோன்கள், ராட்சத பலூன்கள் பறக்க தடை

வேலூரில் நாளை ஒருநாள் ட்ரோன்கள், ராட்சத பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


சென்னை: வேலூரில் நாளை நடைபெறும் அரசு மற்றும் திமுக பவள விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதனையொட்டி நாளை ஒருநாள் ட்ரோன்கள், ராட்சத பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேலூரில் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் ரூ.79.70 கோடியில் கட்டப்பட்டுள்ள 1,591 குடியிருப்புகளை ஞாயிற்றுக்கிழமை (செப்.17) திறந்து வைத்து பயனாளிகளிடம் ஒப்படைக்கவும், பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்கவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று இரவு (செப்.16) ரயில் மூலம் வேலூருக்கு வருகிறாா்.

இந்நிலையில் முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் ட்ரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள் பறக்க காவல்துறை தடை வித்துள்ளது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் புதிய பேருந்து நிலையம், பழைய மாநகராட்சி அலுவலகம், பெரியார் சிலை உள்ள அண்ணாசாலை, மேல்மனவூர், இலங்கை அகதிகள் முகாம் மற்றும் முப்பெரும் விழா நடைபெறும் பள்ளிகொண்ட கந்தனேரி ஆகிய பகுதிகள் "நோ ஃப்ளையிங் ஜோன்" பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு பணியை பொறுத்த வரைக்கும் தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல் துறை தலைமை இயக்குனர் அவர்களின் தலைமையில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் (ஐஜி), 3 காவல்துறை துணைத் தலைவர்கள் (டிஐஜி), 13 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் (எஸ்பி) மற்றும் சுமார் 3000 காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

முதல்வர் தங்கும் இடம் மற்றும் பயணிக்கும் பாதைகளில் கனரக வாகனங்கள் செல்லவும் தடைவிதிக்கப்பட்டு மாற்று பாதையில் செல்ல அறிவுத்தப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com