

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களையும் ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள தனியாா் அசைவ உணவகத்தில் ஷவா்மா, கிரில் சிக்கன் சாப்பிட்ட 14 வயது சிறுமி வாந்தி, பேதி ஏற்பட்டு உயிரிழந்தார். மேலும், 13 கல்லூரி மாணவிகளும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, தனியார் உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டு, கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் முழுவதும் உணவகங்களில் ஷவர்மா விற்பனை செய்ய தற்காலிக தடை விதித்து மாவட்ட நிர்வாகம் திங்கள்கிழமை உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உணவகங்களிலும் ஆய்வு செய்ய மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், உரிய நெறிமுறைகளை பின்பற்றாமல் தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.