
இண்டிகோ
தில்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தின் அவசரகால கதவை நடுவானில் திறக்க முயற்சித்த ராணுவ வீரரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தில்லி விமான நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்னை விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் செங்கத்தை சேர்ந்த ராணுவ வீரர் மணிகண்டன் என்பவர் பயணித்துள்ளார்.
இந்த நிலையில், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று அவசரகால கதவை மணிகண்டன் திறக்க முயற்சித்துள்ளார்.
இதையும் படிக்க | சென்னையில் 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
இதனை கண்ட பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டுள்ளனர். உடனடியாக இண்டிகோ ஊழியர்கள் மணிகண்டனை தடுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமானி அளித்த புகாரை தொடர்ந்து, மணிகண்டனிடம் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...