
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமான வரி ஏய்ப்பு செய்த புகாரின் அடிப்படையில் 4 தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகின்றது.
இதையும் படிக்க | அதிகரிக்கும் போா்ப் பதற்றம்: ஆா்மீனிய ஆதரவுப் பகுதியில் அஜா்பைஜான் தாக்குதல்!
சென்னை துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, எண்ணூர், நாவலூர் உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...