
கோப்புப்படம்
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், காலை 10 மணிவரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை ஏற்கெனவே வானிலை மையம் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் கிண்டி, கோயம்பேடு, அண்ணா நகர், அம்பத்தூர், தாம்பரம், சோழிங்கநல்லூர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக தொடர் மழை பெய்து வருகின்றது.
அதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனால், வேலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 9 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...