9 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வியாழக்கிழமை (செப்.21) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வியாழக்கிழமை (செப்.21) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வியாழக்கிழமை (செப்.21) நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, தருமபுரி , நாமக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

மேலும், வெள்ளி முதல் செவ்வாய்க்கிழமை (செப்.22-26) வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை அளவு (மி.மீ): கொடைக்கானல் படகு குழாம்(திண்டுக்கல்)-70, திருப்பத்தூா்(சிவகங்கை), விருதுநகா் தலா 60, திருமானூா்(அரியலூா்), மொடக்குறிச்சி(ஈரோடு), குப்பணம்பட்டி(மதுரை), பூதலூா்(தஞ்சாவூா்) , சிவகங்கை, பட்டுக்கோட்டை(தஞ்சாவூா்) தலா 50.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வியாழக்கிழமை (செப்.21) மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com