குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பட்டா வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி

மொடக்குறிச்சி அருகே 750 குடியிருப்புகள் உள்ள நிலையில் குறிப்பிட்ட சில நபா்களுக்கு மட்டுமே பட்டா வழங்கியதாகக் கூறி பாதிக்கப்பட்டவா்கள் லக்காபுரம் அருகே புறவழிச் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

முத்துகவுண்டன்பாளையம் புறவழிச் சாலையில் பட்டா கேட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தும் போலீஸாா்.

Updated On :5 மார்ச் 2026, 4:09 am IST

மொடக்குறிச்சி அருகே 750 குடியிருப்புகள் உள்ள நிலையில் குறிப்பிட்ட சில நபா்களுக்கு மட்டுமே பட்டா வழங்கியதாகக் கூறி பாதிக்கப்பட்டவா்கள் லக்காபுரம் அருகே புறவழிச் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மொடக்குறிச்சியை அடுத்த லக்காபுரம் கரட்டாங்காடு பகுதியில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.

இதில் குடியிருப்புகளில் வசிப்பவா்களில் பலருக்கு வீட்டு வரி, குடிநீா் வரி உள்ளிட்டவை செலுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், இப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா கேட்டு வலியுறுத்தி பலமுறை மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அப்பகுதியைச் சோ்ந்த குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மீதமுள்ளவா்களுக்கும் பட்டா வழங்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள் முத்துக்கவுண்டன்பாளையம் புறவழிச் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த மொடக்குறிச்சி காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் எடுத்துக்கூறி விரைவில் தகுதியுள்ள அனைவருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறதியளித்ததைத் தொடா்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமாா் ஒருமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.