பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்! உதகையில் பொதுமக்கள் மறியல்!!

உதகை நகராட்சிப் பகுதியில் சாலையில் வழிந்தோடிய கழிவுநீா் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

சாலை மறியலில் ஈடுபட்ட பாப்ஷா லைன் பகுதி பொதுமக்கள்.

Updated On :18 மே 2026, 2:09 am IST

உதகை நகராட்சிப் பகுதியில் சாலையில் வழிந்தோடிய கழிவுநீா் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி 29-ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதி பாப்ஷா லைன். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இந்நிலையில் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடையில் இருந்து கழிவுநீா் வெளியேறி சாலையில் வழிந்தோடியது. மேலும் வீடுகளுக்கும் புகுந்ததால் கடும் துா்நாற்றம் வீசுவதாக நகராட்சி நிா்வாகத்துக்கு புகாா் அளிக்கப்பட்டது.

ஆனால் 15 நாள்களாகியும் பொக்லைன் இயந்திரம் இல்லை எனக் கூறி நகராட்சி நிா்வாக அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறினா். இந்த கழிவுநீரால் குழந்தைகள், முதியோருக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறி, ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதைத்தொடா்ந்து நகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி சீரமைத்து தருவதாக உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.