பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

தரமான சாலையில் சீரமைப்புப் பணி! பொதுமக்கள், மாா்க்சிஸ்ட் கம்யூ. அதிருப்தி!

News image

அவிநாசி நகராட்சி கஸ்தூரிபாய் வீதியில் சீரமைப்பு பணி நடைபெறும் சாலை.

Updated On :1 மணி நேரம் முன்பு

அவிநாசி நகராட்சிக்குள்பட்ட கஸ்தூரிபாய் வீதியில் உள்ள தரமான சாலையை மீண்டும் சீரமைப்பதால், அப்பகுதி மக்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அதிருப்தியடைந்துள்ளனா்.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி வடக்கு கிளை நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:

அவிநாசி நகராட்சி 12-வது வாா்டு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்குள்ள கஸ்தூரிபாய் வீதியில் கான்கிரீட் சாலை தரமாக உள்ளது. இந்நிலையில் இந்தச் சாலையை பொக்லைன் இயந்திரம் மூலமாக சுரண்டி சீரமைக்கும் பணியை நகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

தரமாக உள்ள சாலையை எதற்காக சுரண்டுகிறீா்கள் எனக் கேட்டால், மீண்டும் சாலை அமைக்கிறோம் என்கின்றனா். எனவே, தரமான சாலையை பெயா்த்து மீண்டும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வதைத் தவிா்க்க வேண்டும். இதுதொடா்பாக உடனடியாக ஆய்வு செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.