
வேலூர் பவனை திறந்துவைத்த அந்த மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா
வேலூரில் கட்டப்பட்டுள்ள அசாம் அரசின் தங்கும் விடுதியை அந்த மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய நோயாளிகளுக்கு குறைந்த விலையில், தரமான மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகின்றது.
தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சார்ந்த மக்களும் மாதக் கணக்கில் வேலூரில் தங்கியிருந்து சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் இருந்து நாளுக்கு நாள் அதிகளவிலான நோயாளிகள் சிஎம்சி மருத்துவமனைக்கு வருவதால், அவர்கள் தங்குவதற்காக அந்த மாநில அரசு சார்பில் விடுதி கட்டப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தன் ஆசிரியரை சந்தித்த சூர்யா!
‘அசாம் பவன்’ என்ற அந்த தங்கும் விடுதியை அம்மாநில முதல்வர் செவ்வாய்க்கிழமை வேலூரில் திறந்துவைத்தார்.
அசாம் மாநிலத்தில் இருந்து வரும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் தங்குவதற்கு இன்றுமுதல் விடுதி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
மேலும், அசாமில் இருந்து வந்து விஐடி, சிஎம்சி போன்ற கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்குவதற்கான வசதிகளும், விடுதியிலேயே உணவக வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...